தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி கண்டுள்ள நிலையில்,அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
சட்டசபை பொதுத்தேர்தலில் தோல்வி மட்டுமின்றி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் இபிஎஸ் முயற்சியை,கட்சியில் அவரது எதிர்கோஷ்டி முறியடித்தது.
இதையடுத்து நடந்தவை எல்லாமே, இபிஎஸ்.,க்கு தொடர் பின்னடைவை ஏற்படுத்தின.அதிமுக சார்பில் வெற்றி எம்எல்ஏ.,க்கள் 6 பேர், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இபிஎஸ் முடிவுகளை எதிர்த்து மூத்த நிர்வாகிகள் வேலுமணி,சிவி.சண்முகம் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.
எனினும், தேர்தல் ஆணைய விதிமுறைகள் வலுவாக இருந்த காரணத்தால் அவர்களால் இபிஎஸ்சை., எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்து விட்டது. நான்கு மாதங்களுக்கு முன் அதிமுக வென்ற இரு தொகுதிகளிலும், இப்போது விஜய் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
திமுக இரண்டாம் இடத்துக்கு முன்னேறி விட்ட நிலையில், அதிமுகவுக்கு இரு தொகுதியிலும் மூன்றாம் இடமே கிடைத்திருக்கின்றது.இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் மீண்டும் பிரச்னைகள் வெடிக்கும்; கட்சிக்குள் இபிஎஸ் தலைமைக்கு எதிரான குரல்கள் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

