ஒரேதேசம் ரிப்போர்ட்டர் மாத இதழ்
சமீபத்தியவை:
ஆன்மீகம்

அங்காளம்மன் கோவில் வேம்பு மரத்தில் பால் வடிந்த சம்பவம்

க

எழுதியவர்: க. சுப்பிரமணியன் (நிர்வாகி)

12 அக்டோபர் 2026•1 நிமிட வாசிப்பு
பகிர்:
124708
124708

விழுப்புரம் அருகே அங்காளம்மன் கோவில் வேம்பு மரத்தில் பால் வடிந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களுக்கிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.



விழுப்புரம் அருகேயுள்ள கானைக்குப்பத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்ததில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.

அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பழமையான வேம்பு மரத்தில் இருந்து திடீரென பால் போன்ற வெள்ளை நிறத் திரவம் கசிந்து வடிந்துள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக அருகில் சென்று பார்த்துள்ளனர். மரத்திலிருந்து பால் வடிவதை நேரில் கண்ட பக்தர்கள் இது இறைவனின் அருள் என பக்திப் பரவசத்துடன் சிலிர்த்துப் போயினர்.


மேலும் வேம்பு மரத்தில் பால் வடிந்த செய்தி காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியதால் கானைக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு விரைந்து அதிசய மரத்தைக் கண்டு வியந்து வணங்கியும், அதிசயக் காட்சியைத் தங்கள் செல்போன்களிலும் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரையை மற்றவர்களுடன் பகிருங்கள்:
பகிர்:

தொடர்புடைய முக்கியக் கட்டுரைகள்